கருப்பை வாய் புற்றுநோய்

மேலும் விபரங்களுக்கு: டாக்டர். இந்திரா நெடுமாறன், M.B.B.S.,F.E.M(U.K).,D.N.B(OBGYN)  +91-9840979397  Billroth hospitals ,Chennai. 

 செய்தி மூலம்:  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=14461

கருப்பைவாயில் புற்றுநோய் தடுக்கும் முறைகள்:

இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். 

கருப்பைவாய் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களை Pap Smear, 'எச்.பி.வி.,' வைரஸ், Colposcopy  என்னும் கருவியின் மூலம் கருப்பைவாயில் உள்ள மாற்றங்களை பார்த்து எளியமுறையில் பரிசோதனை செய்யலாம். 

கருப்பைவாய் பரிசோதனையில் மிக எளிதானது Pap Smear பரிசோதனை ஆகும். 

இம்முறையில் எடுக்கப்படும் திசுக்களை பரிசோதிப்பதன் மூலம், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியை கண்டறியமுடியும். 

பரிசோதனைக்கு வரும் பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. 

ஏனெனில், இந்நோய் முற்றிய நிலைக்கு வர சில காலமாகும்; அறிகுறி இருந்தால் அதற்குள் புற்றுநோயை தடுக்க முடியும். 

இந்நோய் நுண்கிருமி பாதிப்பால் ஏற்படுவதால், அதை தடுப்பூசி மூலம் தடுக்கலாம். 

இத்தடுப்பூசி போடுவதால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது; 'எச்.பி.வி.,' வைரசின் பாதிப்பு தடுக்கப்படுகிறது. 

இத்தடுப்பூசி நுண்கிருமியால் பாதிப்பு ஏற்படாதவர்களுக்கு பிற்காலத்தில் இந்த வைரசால் வரும் பாதிப்பை தடுக்கிறது; ஆனால், ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிகிச்சை மருந்தாக செயல்படாது. 

இது மூன்று ஊசிகளாக ஆறுமாத இடைவெளியில் கொடுக்கப்படுகிறது. 

இளம் வயதிலேயே கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாய்ப்புள்ளது. 

கருப்பைவாய் புற்றுநோய் என்பது முற்றிய நிலையில் மட்டுமே பிரச்னைகள் தரும். 

அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய பரிசோதனைகள் உள்ளன. 

இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட வேண்டும். 


கருப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒரு விழிப்புணர்வு: 

கருப்பைவாய் புற்று நோயானது இந்திய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் முதன்மையானது.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்து லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இதில் ஒண்றரை லட்சம் பெண்கள் இந்தியாவில் உள்ளனர். 

கருப்பைவாய் புற்று நோய் பாதிப்பில் மூண்ற்றில் ஒரு பங்கை இந்திய தாய் சுமக்கிறாள்.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு லட்சத்து எழுபதைந்தாயிரம் பெண்கள்கருப்பை வாய் புற்று நோயால் இறக்கின்றனர், இதில் எழுபதாயிரம் இந்தியப் பெண்களும் அடங்கும். 

 இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இருநூறுக்கும் அதிகமான பெண்கள் இந்த கொடிய புற்று நூயால் இறக்கின்றனர்.ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் இந்த நோய்க்கு பலியாகிறாள். இந்த கொடியநோயின் காரணி எது? 

இது ஹூமன் பாபில்லோமா வைரஸ் என்ற நுண்ணுயிர் தொற்றால் வருகிறது. 

இந்நோய்தொற்று யாருக்கு வரும்? 

 குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு இந்நோய்தொற்று உண்டாகும். 

எவ்வாறு கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது? 

இந்நோய் தொற்றானது கருப்பை வாயில் உள்ள செல்களை தாக்கி அந்த செல்களின் இயல்புதண்மையை மாற்றி அமைக்கின்றது.இதனால் செல்களானது அபரிதமாக வளரும் தண்மை உள்ளதாக மாற்றம் அடைகிறது.இது கருப்பை வாய் புற்றுநோயின் முன்னோடி. இந்நிலையனது 5 முதல் 15 வருடம் வரை இருந்து பின்பு புற்று நோயாக மாறுகிறது.அபரிதமாக வளரும் தண்மை உடைய செல்கள் கட்டுப்பாடிள்ளாமல் வளரும்பொது 
 புற்றுநோயகாக மாறுகிறது. 


Comments