பெண்ணின் பெருமை

தகவல் உதவி: விஸ்வநாத் பிரபு ராமமூர்த்தி, சிங்கப்பூர்


                   பெண்ணின் பெருமை
                     (குறள் வெண்பா)

கருவறைக் கோயிலால் காலனை வீழ்த்தும்
இறைவனின் தூதே இவள்.

பேறெனும் பேறுபெற்ற பேறினும் சீர்த்தபேறு
வேறெதும் உண்டோ இவண்.

பழுதிலாப் பாலகப் பால்செயும் கூடம்
முழுநிலாப் பாவை இவள்.

அழகொளித் தோட்டம்அறிவொளிக்கூட்டம்
பழகிடும் பாங்கே தனி.

உறவுகள் மேம்பட ஊனுயிர் நீள
வரவுகள் ஆனதே பெண்.

மென்மை எனப்படும் பெண்மை, பெருமனத்
திண்மை அதுவே அறி.

இல்லார் எனினும் இறைவன் உடனுறையும்
இல்லாள் இணைந்தாளும் இல்.

ஆணின் அடிமனதில் அன்போங்கும் அங்கமெனும்
தேனின் சுவையே சுவை.

பெண்மையைப் போற்றின் பெருகிடும், போற்றாமை
நன்மை அழித்து விடும்.

ஆணில் சரிபாதி ஆனதுமே வாழ்வியல்
பேணப் பெருமை தரும்.

                                       -- காசாங்காடு அமிர்தலிங்கம்
Comments