கவிதை‎ > ‎

கவிஞர். சுகுமாரன்

காசாங்காடு கிராமத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவில் திரு. சுகுமாரன் அவர்களின் காசாங்காடு கிராம இணையதளத்திற்கு அளித்த கவிதை.


சீர்மிகு காசாங்காட்டின் பெயரை உணர்த்த
பேரெழிலாய் வந்திட்ட இணையதளம் தம்மை
வேறெங்கும் கண்டதில்லை உலகம் தம்மில்
நாரென கிழித்திடுவார் தீங்கு தன்னை
நூறென வாழ்ந்திடுமே ஆண்டுகளாலே.

சிற்சில காரியத்தால் சமயத்தில் பின்னிட்டாலும்
பற்பல செய்திகளை பறைசாற் றிற்றன்றோ!
குற்றமதை குற்றமென்றே உணர்த்தினார்- அவர்தம்
குற்றமதை குற்றமென உணர்ந்தாரன்றோ!!

கற்றவரும் மற்றவரும் வாழும் காசாங்காட்டில்
உற்றவராய் உரியவராய் ஊரறிந்தவராய் உதவிசெய்ய
பெற்றோரைப் போலபேணி காத்திடவே புறப்பட்டாய்
வேற்றூராரும் புகழும் பெயரும் பெற்றாய்!

உள்ளுரில் இருப்பவர் ஒன்றைச் சொல்வார்
"வெள்ளாளன் என்பார் விருந்திருக்க உண்ணாதார்"-என!
தள்ளாத முதியவரும் தரணியிலே போற்றிடுவார்
தொள்ளிய காசாங்காட்டின் தொண்மை விளக்கியதால்!!


கவிதைக்கு இணைய குழுவின் நன்றிகள்.
Comments