தமிழாண்டு தருகின்ற சித்திரைப் பெண்ணே! அமிழ்துண்டு உனை அனைத்த காரணத்தால் உமிழ்நீராம் உந்தனது வைகாசி பெருக்கெடுக்க! ஆனித்தரமாக நீ ஆடிவருகையிலே உன் தாவணியில் ஆவணியை மறைத்திட்டாய்! இப் புரட்டாச்சியை அழிப்பதற்கு புரட்டாசியை படைத்திட்டாய்! பிற ஐயத்தை தீர்பதற்கு ஐப்பேசியாய் மாறுகின்றாய்! கார்குடலை கொண்டு கார்த்திகையாய் பின்னிநின்றாய்! நின் மார் மீது கை வைத்து துணி கழித்தேன் மார்கழியாய் மார்கின்றாய்! புடம்போட்ட தையவலே,மாசியிலே மாக்கவிஞன் படம் பிடித்தேன் நின் அழகை. பங்குனியில் நீ எனக்கு பதுமையில் நீயேயாகும். |
கவிதை > கவிஞர். தீபக்குமார் >