குறிப்பு: தகவல்கள் அனைத்தும், இணைய தளங்களிரிந்து செகரிக்கபட்டவை. கால அலகுகள் தவறாக இருப்பின் இணைய குழுவிற்கு தெரியபடுத்தவும். இந்த கட்டுரை எழுதும் பொது நடந்த கால சக்கரத்தின் பெயர்கள்: பிரம்மா காலம் = பகல் கல்பம் = ஸ்வேத வராஹ மன்வந்திரம் = வைவஸ்வத யுகம் = கலியுகம் (5111 வது வருடம்) வருடம் = விரோதி மாதம் = கார்த்திகை இங்கு அளிக்கப்பட்டுள்ள காலங்கள், கிராமத்தில் தினசரி வாழ்க்கை முறைகளில் பயன்படுத்தும் கால அலகு. கால அளவுகள்: 1 நொடி = 2 கண்ணிமை 1 மாத்திரை = 2 கைநொடி 1 குரு = 2 மாத்திரைகள் 1 உயிர் = 2 குருக்கள் 1 சணிகம் = 2 உயிர்கள் 1 விநாடி= 12 சணிகங்கள் 1 விநாடி = 60 தற்பரைகள் 1 நிமிடம் = 60 விநாடிகள் 1 பாகை = 4 நிமிடங்கள் 1 நட்சத்திரம் = 13.33 பாகைகள் 1 யோகம் = 27 நட்சத்திரம் 1 நாழிகை = 24 நிமிடங்கள் 1 மணி அல்லது ஓரை = 2 1/2 நாழிகைகள் 1 முகூர்த்தம் = 3 3/4 நாழிகைகள் 1 சாமம் = 2 முகூர்த்தங்கள் 1 பொழுது = 4 சாமங்கள் 1 நாள் = 2 பொழுதுகள் 1 திதி = 31 நாட்கள்1 கரணம் = 1/2 திதி 1 வாரம் = 7 நாட்கள் 1 பட்சம் = 15 நாட்கள் 1 மாதம் = 2 பட்சங்கள் 1 பருவம் = 2 மாதங்கள் 1 அயனம் = 3 பருவங்கள் 1 வருடம் = 2 அயனங்கள் = (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை) 1 தேவ ஆண்டு = 360 மனித ஆண்டுகள் யுகங்கள்: 1 யுகம் = 4,32,௦௦௦ ஆண்டுகள் 1 கிருதயுகம் = 4 யுகங்கள் 1 திரேதாயுகம் = 3 யுகங்கள் 1 துவாபரயுகம் = 2 யுகங்கள் 1 கலியுகம் = 1 யுகம் 1 சதுர்யுகம் = 10 யுகங்கள் 1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள் 1 கல்பம் = 14 மன்வந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல் 1 மகா பிரளயம் = 14 மன்வந்திரங்கள் 1 பிரம்மா காலம் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) இதன் பின் பிரம்மாவின் காலம் சுழலும். பிரம்மாவிற்கு வயது 100. முடிந்ததும் அடுத்த பிரம்ம தோன்றுவார். மேலும் ஒவ்வொரு அலகுகளின் பெயர்கள்: வார நாட்கள்: ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின் படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும்.
திதிகள்: திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான வளர்பிறைக் காலத்தில் 14 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 14 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:
கரணம்: ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:
பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
பருவங்கள்:
|