தமிழில் மரியாதை சொற்கள்

தகவல் உதவி:  திரு. கண்ணையன், திரு. சுகுமாரன்

பெயருக்கு முன் பயன்படுத்த படும் மரியாதை சொற்கள்:

"திரு":
ஒருவரை எப்படி சொல்லி  என்று தெரியவில்லையெனில் திரு. கொண்டு பயன்படுத்தலாம். திருமணமான அல்லது திருமணம் ஆகாத ஆண்களை அழைக்கும் விதம்.
"திருவாட்டி"
      திருமணமான அல்லது திருமணமாகாத பெண்ணை அழைக்கும் விதம்.
"திருமதி"
      திருமணமான பெண்ணை அழைக்கும் விதம்.
"செல்வன்" அல்லது "சிரஞ்சீவி"
    திருமணமாகாத ஆண் இனத்தவரை அழைக்கும் முறை. திரு என்றும் பயன்படுத்தலாம்.
"செல்வி"
   திருமணமாகாத பெண் இனத்தவரை அழைக்கும் முறை. திருவாட்டி என்றும் பயன்படுத்தலாம்.
"முனைவர்"
   முனைவர் பட்டம் பெற்றவரை இதை கொண்டு அழைக்கலாம். திரு அல்லது திருவாட்டி என்றும் பயன்படுத்தலாம்.
"மாண்புமிகு"
   அரசாங்கத்தின்(அரசியல்) உயர்ந்தபதவியில் இருப்பவரை அழைக்கும் முறை
"ஐயா"
   அறுபது வயதிற்கு மேலே உள்ள ஆண்களை அழைக்கும் முறை.
"திருவாளர்"
       திருமணம் ஆகிய ஆண்களை அழைக்கும் முறை
"மருத்துவர்"
      மருத்துவர் பட்டம் பெற்றவரை அழைக்கும் முறை. திரு என்றும் அழைக்கலாம்.
"பொறியாளர்"
       பொறியாளர் பட்டம் பெற்றவரை அழைக்கும் முறை. திரு என்றும் அழைக்கலாம்.
"அம்மையார்"
   அறுபது வயதிற்கு மேலே உள்ள பெண்களை அழைக்கும் முறை.
"நீதியரசர்"
     நீதி மன்றத்தில் நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்.
"வழக்கறிஞர்"
      சட்டம் பயின்று, தனி மனிதனின் உரிமையை நிலை நாட்டுபவரை அழைக்கும் முறை.
"புலவர்"
    மொழி ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்
"பாவலர்"
    இலக்கியத்தில் "பா" என்றொரு வகையுண்டு, அப்பாவகையினை இயற்றுவதில் வல்லவர்களை இப்படி அழைக்கிறோம்.
"மேதகு"
    மேன்மை தாங்கிய-ஆட்சி அதிகாரத்தின்(ஆட்சியியல்) முதலாக இருப்பவர்களை அழைக்கும் முறை(பல்கலைக்கழக வேந்தர்கள்,ஆளுநர், அரசர்கள் பரம்பரை)

பெயருக்கு பின் அல்லது வாக்கியத்தின் உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படும் மரியாதை சொற்கள்:

"அவர்கள்"
        ஆணுக்கும் பெண்ணுக்கும் இவற்றை பயன்படுத்தலாம்.
"சிறுமி"
        பதினாறு வயதிற்கு உட்பட்ட பெண்.
"சிறுவர்"
       பதினாறு வயதிற்கு உட்பட்ட ஆண்.
"அவள்"
       வயதிற்கு குறைவான பெண்களை அழைக்கும் முறை.
"அவன்"
      வயதிற்கு குறைவான ஆண்களை அழைக்கும் முறை.
Comments